ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்?

தினமலர்  தினமலர்
ஆர்ஆர்ஆர் அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்?

ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியாபட், சமுத்திரகனி உள்பட பலர் நடித்து வரும் இப்படத்தில் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனும் நடிக்கிறார்.

இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த அஜய் தேவ்கன், ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் கேரக்டர்களை வழிநடத்தும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். படத்தின் ஹிந்தி வியாபாரத்தை கருத்தில் கொண்டு அவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தை கொடுத்துள்ளாராம் ராஜமவுலி. அதோடு, இந்த படத்தில் நடிக்க அஜய் தேவ்கனுக்கு ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை