தயாரிப்பாளர் மாற்றமா.? - விஜய் 64 தரப்பு மறுப்பு

தினமலர்  தினமலர்
தயாரிப்பாளர் மாற்றமா.?  விஜய் 64 தரப்பு மறுப்பு

பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். நாயகியாக மாளவிகா மோகன் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் சாந்தனு, ஆண்டனி வர்க்கீஸ், ஸ்ரீமன் உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர் சார்பில் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

தற்போது இந்த படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திலிருந்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ விலகிவிட்டதாகவும், வேறொரு நிறுவனத்துக்கு இப்படத்தை கைமாற்றி விட்டதாகவும் தகவல் வெளியானது.

இதனை விஜய் 64 படக்குழு மறுத்துள்ளது. ‛‛தயாரிப்பாளர் மாற்றம் என்பது முற்றிலும் பொய்யான தகவல். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக'' டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை