‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி

தினமலர்  தினமலர்
‛மங்காத்தா 2 படத்துக்கு ரெடி

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படமாக வெளிவந்த வெற்றிப்படம் ‛மங்காத்தா'. இதன் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் தொடர்ந்து வெங்கட் பிரபுவிடம் கேட்டு வருகின்றனர்.

இதற்கிடையே அஜித்தின் அறிவுரைப்படி தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து ‛மங்காத்தா 2' கதையை சொல்லியிருக்கிறார் வெங்கட்பிரபு. அவருக்கு பிடித்துபோக படம் எடுக்க ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

‛அஜித் 60' முடித்த பின் அஜித்தின் 61வது படமாக ‛மங்காத்தா 2' உருவாகும் என தெரிகிறது.

மூலக்கதை