இயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
இயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார்  ஆழ்ந்த இரங்கல்கள்

 

திரு.ராஜசேகர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும்,  திரைப்பட, மற்றும் சின்னத்திரை நடிகரும் ஆவார். அத்துடன் திரைக்கதை எழுத்தாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

*ராஜசேகர் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்.. ஜெயபாரதியின் இயக்கத்தில் 1979 இல் வெளிவந்த குடிசை திரைப்படத்தில் இராபர்ட் ஆசீர்வாதம் என்பவருடன் இணைந்து பணியாற்றினார்.

*பின்னர் இராபர்ட்டுடன் இணைந்து சுஹாசினி நடிப்பில் 1981 இல் வெளிவந்த பாலைவனச்சோலை திரைப்படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியளித்தது.

இருவரும் இணைந்து இயக்கிய திரைப்படங்கள்: பாலைவனச்சோலை (1981),  புதிய சரித்திரம் , பறவைகள் பலவிதம் , சின்னப்பூவே மெல்லப்பேசு (1987) , மனசுக்குள் மத்தாப்பூ (1988) , தூரம் அதிகமில்லை , கல்யாணக் காலம் மற்றும்  தூரத்துப் பச்சை .

*திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். அவர் திரைக்கதை-வசனம்  எழுதிய படங்கள் : 

வேலும் மயிலும் துணை (1979), திரைக்கதை  சின்னப்பூவே மெல்லப்பேசு (1987), திரைக்கதை   மனசுக்குள் மத்தாப்பூ (1988), திரைக்கதை, வசனம்   பார்வைகள் பலவிதம் (1988), வசனம் பாலைவனச் சோலை, திரைக்கதை 

*நடிகராக இவர் அறிமுகமான நிழல்கள் இவரின் நடிப்பிற்குச் சிறந்த சான்றாக இன்றளவும் பேசப்படுகிறது. இவரின் நடிப்பில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல்" மறக்க முடியாத இசைப் பெட்டகமாகக்  கருதப்படுகிறது. நிழல்கள் (1980), தமிழன், நரசிம்மா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். *சரவணன் மீனாட்சி, தென்றல் போன்ற சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். *சிக்கல்கள் நிறைந்த திரை உலகில் எந்தச் சிக்கல்களிலும் சிக்கிக் கொள்ளாத நடிகர் இவர்.

*சில நாட்களாக உடல் நலக் குறைபாட்டால்,  சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் செப்டம்பர் 8, 2019 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

வலைத்தமிழ் வாசகர்கள் சார்பாக எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

மூலக்கதை