தங்க பத்திரம் தரும் வரிச்சலுகைகள்

தினமலர்  தினமலர்
தங்க பத்திரம் தரும் வரிச்சலுகைகள்

முதலீடு நோக்கில் தங்கம் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தங்க முதலீட்டிற்கான சிறந்த வழிகளில் ஒன்றாக இருக்கும்,


அரசு வெளியிடும் தங்க சேமிப்பு பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வரிச்சலுகைகள்:தங்க சேமிப்பு பத்திரம், 8 ஆண்டு காலம் முதிர்வு கொண்டது. முதிர்வு காலம் வரை வைத்து இருந்தால், மூலதன ஆதாய வரி கிடையாது. முதிர்வு தொகைக்கு வரி கிடையாது.தங்க சேமிப்பு பத்திரங்கள் மீது கிடைக்கும் வருமான வரிச்சலுகை, தங்க ஈ.டி.எப்., மற்றும் தங்க மியூச்சுவல் பண்ட்களில் கிடையாது.தங்க நகைகள் மீது, 3 சதவீத ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.



தங்க சேமிப்பு பத்திரங்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. மேலும் செய்கூலி, சேதாரம் போன்ற செலவுகளும் இல்லை.தங்க சேமிப்பு பத்திர முதலீட்டிற்கு ஆண்டுக்கு, 2.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. இதற்கு டி.டீ.எஸ்., பிடித்தம் செய்யப்படுவதில்லை. வட்டி வருமானம், ஒருவரது வருமானத்தில் சேர்த்துக்கொள்ளப்படும். வேறு தங்க முதலீடுகள் எதுவும் வருமானம் அளிப்பதில்லை.


தங்க சேமிப்பு பத்திரங்களில் இருந்து, 5 ஆண்டுக்கு பின் வெளியேறலாம். இவை பங்குச் சந்தையிலும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. இம்மாதம், 21ம் தேதி முதல், 25ம் தேதி வரை இவை மீண்டும் வெளியிடப்படுகின்றன.

மூலக்கதை