தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவி: பிசிசிஐ மாஜி தலைவர் மகள் போட்டி?..நாளை தேர்தல் நடப்பதால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவி: பிசிசிஐ மாஜி தலைவர் மகள் போட்டி?..நாளை தேர்தல் நடப்பதால் பரபரப்பு

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 87வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை (செப். 26) காலை 10. 45 மணிக்கு நடக்கிறது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (செப்.

25) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இன்று மாலையே வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் குழு பரிசீலனை செய்து இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளனர்.


அப்போது, வேட்பாளர்களுக்குள் போட்டி எதுவும் இல்லை என்றால் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும்.
 
புதிய நிர்வாகிகள் பதவிக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என். சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தலைவர் பதவிக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எல். சிவராமகிருஷ்ணனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

அவர் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணியாற்றுவதால், அவரது பெயர் விலக்கிக்கொள்ளப்பட்டது.

ரூபா தேர்ந்தெடுக்கப்படும் சூழலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்கிற பெருமையைப் பெறுவார்.

.

மூலக்கதை