15 வயதில் கிளப் சீனியர் விளையாட்டு உறுப்பினராக சச்சினை களமிறக்கிய மாஜி வீரர் மறைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
15 வயதில் கிளப் சீனியர் விளையாட்டு உறுப்பினராக சச்சினை களமிறக்கிய மாஜி வீரர் மறைவு

மும்பை: மும்பையைச் சேர்ந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மாதவ் ஆப்தே (86), 1952-53 காலக்கட்டங்களில் இந்திய அணிக்காக ஏழு டெஸ்டுகளில் விளையாடி, 542 ரன்கள் எடுத்துள்ளார். ரன்கள் சராசரி  49. 27.

உடல்நலக்குறைவால் மும்பையின் பீரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாதவ் ஆப்தே, சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். 67 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ள மாதவ் ஆப்தே, 3336 ரன்களும் ஆறு சதங்களும் அடித்துள்ளார்.

மாதவ் ஆப்தேவின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டி. பி.

தியோதர் மற்றும் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து விளையாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் மாதவ் ஆப்தேவுக்கு உண்டு.   சி. சி. ஐ விதிகளை வளைத்து, சச்சின் டெண்டுல்கரை 15 வயதில் கிளப்பின் சீனியர் விளையாட்டு உறுப்பினராக்கினார். ஆப்தேவின் மறைவுக்கு பி. சி. சி. ஐ இரங்கல் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மாதவ் ஆப்தே, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் நான்காவது வயதானவர், டி. கே. கேக்வாட், சி. டி. கோபிநாத் மற்றும் சந்திரகாந்த் படங்கர் ஆகியோருக்கு மட்டுமே இளையவர். மற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்களும் ஆப்டேவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

ஓய்வுக்குப் பிறகு, மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவின் தலைவராக ஆப்தே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை