சுற்றி வரும் சர்ச்சை

தினமலர்  தினமலர்
சுற்றி வரும் சர்ச்சை

'சர்ச்சைக்குள்ளான விஷயங்களில் சிக்கி விடக் கூடாது; நாம் உண்டு, நம் வேலை உண்டு' என, இருப்பவர் தான், விஜய் சேதுபதி.

ஆனால், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க, விஜய் சேதுபதி சம்மதித்ததில் இருந்து, அவரை, சர்ச்சை சுற்றி சுற்றி வருகிறது. இந்த விஷயத்தை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல், ரொம்பவே உஷாராகவே இருக்கிறார், அவர்.

அடுத்ததாக, அவர் நடித்த, சங்க தமிழன் படம், அடுத்த மாத துவக்கத்தில் வெளியாக உள்ளது. இதில், நிவேதா பெத்துராஜ், ராஷி கன்னா என, அவருக்கு இரண்டு ஹீரோயின்கள். நீண்ட நாட்களுக்கு பின், கிராமத்து பின்னணியில் உருவான இந்த படம், தனக்கு மற்றுமொரு வெற்றியை பெற்றுத் தரும் என, நம்புகிறார், விஜய் சேதுபதி.

மூலக்கதை