கரீனாவின் உடை 1 லட்சம் ரூபாய்

தினமலர்  தினமலர்
கரீனாவின் உடை 1 லட்சம் ரூபாய்

பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு, 39 வயதாகிறது. திருமணம் முடிந்து, குழந்தையும் பிறந்து விட்டது. ஆனாலும், நடிப்பின் மீது, அவருக்குள்ள தாகம் குறைவது போல் தெரியவில்லை. தொடர்ந்து, முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து வருகிறார். மேலும், இளம் நடிகையர் பலர், பாலிவுட்டுக்கு படையெடுத்துள்ளதால், அவர்களின் கவர்ச்சி புயலில், தான், காணாமல் போய் விடக் கூடாது என்பதிலும், கவனம் செலுத்துகிறார்.

தற்போதைய பேஷனுக்கு ஏற்றபடி, உடைகளை அணிவதில், ரொம்பவே கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர், ஒரு, 'டிவி ரியாலிட்டி ஷோ'வில் பங்கேற்க வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த உடை, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ளதாம். பாலிவுட் பிரபலங்களிடையே, தற்போது இதுபற்றித் தான், பரபரப்பாக பேசப்படுகிறது.

மூலக்கதை