ராஜமுந்திரி சிறையில் கமல்

தினமலர்  தினமலர்
ராஜமுந்திரி சிறையில் கமல்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன்-2. கமலுடன் சித்தார்த், நெடு முடிவேணு, சமுத்திரகனி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிக்கிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

அடுத்தக்கட்டமாக தற்போது ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக அங்குள்ள சிறைச்சாலைக்கு கமல் சென்றுள்ளார். இந்தியன் 2 கதைப்படி, சேனாதிபதி கமல்ஹாசன் ஜெயிலில் இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. அதனால் 15 நாட்கள் படப்பிடிப்பை இங்கு தொடர உள்ளனர்.

தற்போது கமலுடன் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இணைந்து நடித்து வருகின்றனர். காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நவம்பர் மாதம் துவங்குகிறது.

மூலக்கதை