மலையாளத்துடன் முற்பிறவி தொடர்பு: பிரசன்னா

தினமலர்  தினமலர்
மலையாளத்துடன் முற்பிறவி தொடர்பு: பிரசன்னா

நடிகர் பிரசன்னா தமிழில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென வில்லன் கதாபாத்திரங்களுக்கும் மாறி அதிலும் தன்னை நிரூபித்தார். அதனாலேயே சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பிரித்விராஜ் நடித்த பிரதர்ஸ் டே என்கிற படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பும், அதன்மூலம் மலையாள திரையுலகில் நுழையும் வாய்ப்பும், பாராட்டும் கிடைத்தது.

சமீபத்தில் பிரபல மலையாள மாத இதழ் ஒன்றுக்கு பிரசன்னா, தனது மனைவி சினேகா மற்றும் மகனுடன் போட்டோ ஷூட்டுக்காக சென்றிருந்தார். அப்போது அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டபோது மலையாளத்தில் எந்த தடுமாற்றமும் இன்றி அவர் பேசியதை கண்டு அனைவரும் அசந்து போனார்கள்.

இதுபற்றி பிரசன்னாவிடம் கேட்டபோது, “என்னவோ தெரியவில்லை.. எனக்கு மலையாளம் பேசும்போது ரொம்பவே சந்தோசமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது.. அதனாலேயே அதை எளிதாக கற்றுக் கொண்டேன்.. ஒருவேளை எனக்கும் மலையாளத்திற்கும் முன் பிறவியில் ஏதோ ஒரு தொடர்பு இருக்குமோ என்னவோ” என்று கூறியுள்ளார் பிரசன்னா.

மூலக்கதை