'சைரா' விழா தள்ளி வைப்பு

தினமலர்  தினமலர்
சைரா விழா தள்ளி வைப்பு

சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி, சுதீப், சிறப்புத் தோற்றத்தில் அமிதாப்பச்சன், அனுஷ்கா உள்ளிட்டவர்கள் நடிக்கும் 'சைரா' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியை நாளை செப்டம்பர் 18ம் தேதி ஐதராபாத்தில் நடித்த திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த நிகழ்ச்சியை வரும் செப்டம்பர் 22ம் தேதி தள்ளி வைத்துவிட்டார்களாம். ஆனாலும், மோசமான வானிலைதான் அதற்குக் காரணம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இருந்தாலும் திட்டமிட்டபடி நாளை செப்டம்பர் 18ம் தேதி டிரைலரை வெளியிட உள்ளார்கள்.

சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராஜமவுலி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் தெலுங்குத் திரையுலகில் இந்த விழா மீது பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து நேற்றே பல சிரஞ்சீவி ரசிகர்கள் ஐதராபாத் வந்துவிட்டார்களாம். இப்போது அவர்கள் மேலும் நான்கு நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மூலக்கதை