7 முறை நாமினேஷன்: தப்பிக்கும் கவின்

தினமலர்  தினமலர்
7 முறை நாமினேஷன்: தப்பிக்கும் கவின்

பிக்பாஸ் 3 சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த வாரத்திலேயே நேரடியாக பைனலுக்குத் தகுதி பெறும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என பிக்பாஸ் அறிவித்தார். அதற்கான போட்டிகளும் நேற்று முதல் ஆரம்பமாகின.

நேற்றைய நாமினேஷனில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வரும் வாரம் இவர்களில் ஒருவர் வெளியேறுவார். இதுவரையில் நடந்த 10 வார நாமினேஷனில் 7 வார நாமினேஷனில் கவின் இடம் பெற்றுள்ளார்.

ஆனால், அந்த வாரங்களில் அவர் எலிமினேட் ஆகாமல் தப்பித்துக் கொள்கிறார்கள். போன வாரம் கூட காப்பாற்றப்பட்டவர்களில் கவின் தான் முதலில் இருந்தார். இத்தனைக்கும் கடந்த வாரம் லாஸ்லியா குடும்பத்தார் வந்த போது கவின் மீது மக்களுக்கு அவ்வளவு வெறுப்பு ஏற்பட்டது. அதையும் மீறி அவர் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

கவினுக்கு பொய்யான கணக்குகள் மூலம் கள்ள வாக்குகள் அளிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு சமூக வலைத்தளங்களில் நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டு வருகிறது. வாக்கு கிடைப்பதுதான் முக்கியம் என்றால் டாஸ்க்கிலும் போட்டியிடாத, கேப்டனும் ஆகாத கவின் கூட போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

இந்நிலையில் நேற்று லாஸ்லியாவை வெறுப்பேற்ற, அவர் ஷெரினுடன் அன்பாக இருப்பதாகத் தன்னைக் காட்டிக் கொண்ட பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா அடுத்து ஷெரின் பக்கம் அவர் தாவுகிறார் என சமூக வலைத்தளங்களில் அவரைக் கிண்டலடித்து வருகிறார்கள்.

மூலக்கதை