சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

தினமலர்  தினமலர்
சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிவுடன் நிறைவு

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 200 புள்ளிகளும், நிப்டி 80 புள்ளிகளும் சரிவுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து சரிவுடனேயே இருந்த பங்குச்சந்தைகள், வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 642.22 புள்ளிகள் சரிந்து 36,481.09ஆகவும், நிப்டி 185.90 புள்ளிகள் சரிந்து 10,817.60ஆகவும் நிறைவடைந்தன

கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது, ரூபாயின் மதிப்பு சரிவு, அமெரிக்க - சீனா இடையே நடக்கு வர்த்தக போரை தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதேப்போன்று அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கூட்டம் நடைபெறுவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு காரணமாகவும், அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, வங்கி, எரிசக்தி மற்றும் ஐடி., தொடர்பான பங்குகள் சரிந்தது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன.

இன்றைய வர்த்தகத்தில் 858 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1641 நிறுவன பங்குகள் சரிந்தும், 143 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.

மூலக்கதை