பலாத்கார வீடியோவை திலீப்பிடம் கொடுக்க கூடாது: நடிகை மனு

தினமலர்  தினமலர்
பலாத்கார வீடியோவை திலீப்பிடம் கொடுக்க கூடாது: நடிகை மனு

பிரபலமான நடிகை ஒருவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப், அவரது கார் டிரைவர் சுனில் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். வழக்கு நடந்து வருகிறது. இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.

இந்த வழக்கில் தான் நிரபராதி என்று நிரூபிக்க நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தன்னிடம் தரவேண்டும் என்று நடிகர் திலீப் கேரள உயர்நீதி மன்றதில் மனு தாக்கல் செய்தார். இதற்கு நடிகை தரப்பும், போலீஸ் தரப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் திலீப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து திலீப், இதே கோரிக்கையை முன்வைத்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கேரள போலீசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று நடிகை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் "என் மீது தாக்குதல் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களை திலீப்பிடம் கொடுக்க கூடாது. அதனால் எனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும். அதோடு திலீப் அதை வெளியிடவும், தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை