அன்னிய செலாவணி கடன் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை

தினமலர்  தினமலர்
அன்னிய செலாவணி கடன் ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை

புதுடில்லி:ஏற்றுமதியாளர்களுக்கு, சகாய வட்டியில், அன்னிய செலாவணி கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை, அரசு வெளியிட உள்ளது.



ஏற்றுமதி கடன் வீழ்ச்சி குறித்து, தன் கவலைகளை வெளிப்படுத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியுஷ் கோயல், ஏற்றுமதியாளர்களுக்கு, குறைந்த வட்டியில், அன்னிய செலாவணி கடன் வழங்குவது குறித்த வழிகாட்டுதல்களை, அரசு விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்தார்.



இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:ஏற்றுமதி கடன் வீழ்ச்சியடைந்துள்ளது குறித்து, நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம்.விரைவில் இந்த சிக்கலை தீர்க்க, புதிய திட்டத்துடன் வர உள்ளோம். அது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த திட்டம், அன்னிய செலாவணி கடன், குறைந்த வட்டியில் ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்க உதவுவதாக இருக்கும்.




ஏற்றுமதி கடன் தொடர்பான சில பிரச்னைகள் குறித்து, நிதியமைச்சருடன் கலந்தாலோசிக்க உள்ளோம்.மேலும், அன்னிய செலாவணி கடன் குறித்த வரையறைகளை நிதியமைச்சகம், வர்த்தக அமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் மூலம் இறுதி செய்யப்பட்டு, விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை