தங்கம் விலை சவரன் ரூ.224 சரிவு

தினமலர்  தினமலர்
தங்கம் விலை சவரன் ரூ.224 சரிவு

சென்னை : தங்கம் விலை மெல்ல குறைந்து வருகிறது. இன்று(செப்., 14) சவரன் ரூ.224 சரிந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,584க்கும், சவரன் ரூ.224 குறைந்து ரூ.28,672க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,410க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.2.20 காசுகள் குறைந்து ரூ.48.70க்கு விற்பனையாகிறது.

மூலக்கதை