முன்னாள் கேப்டனுக்கு ‘கேன்சர்’ | செப்டம்பர் 09, 2019

தினமலர்  தினமலர்
முன்னாள் கேப்டனுக்கு ‘கேன்சர்’ | செப்டம்பர் 09, 2019

 மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு ‘கேன்சர்’ பெரும் எதிரியாக உள்ளது. முன்னாள் வீரர் ரிச்சி பெனாய்டு, தோல் ‘கேன்சர்’ (புற்று நோய்) காரணமாக 2015ல் மரணம் அடைந்தார். முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் 75, அதே காரணத்திற்காக தற்போது ‘ரேடியேசன் தெரபி’ சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் 2015ல் ஆஸ்திரேலியாவுக்கு உலக கோப்பை வென்று தந்த முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 38, கடந்த 2006ல் தோல் ‘கேன்சரால்’ பாதிக்கப்பட்டார். இதில் இருந்து மூன்றாவது முறையாக மீண்டது தற்போது தெரியவந்தது.

சிகிச்சையில் போது இவர் புருவத்துக்கு அருகில் தையல் போட்ட போட்டோவை, தனது ‘இன்ஸ்டாகிராம்’ வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில்,‘ மீண்டும் அதேபோல, தோல் ‘கேன்சர்’, எனது நெற்றியில் தழும்பு விழ வைத்தது. இளைய தலைமுறையினர் தங்களது முகத்தை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை