2வது முறையாக ஹாட்ரிக் மலிங்கா மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
2வது முறையாக ஹாட்ரிக் மலிங்கா மகிழ்ச்சி

பல்லேகெலே: இலங்கை -நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி டி. 20 போட்டி பல்லேகெலே மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 25 ரன் எடுத்தது.

இதனையடுத்து, 126 ரன் இலக்கை துரத்திய நியூசிலாந்து வீரர்கள் மலிங்கா வேகத்தில்  சரிந்தனர். ஆட்டத்தின் 3வது ஓவரை வீசிய மலிங்கா, 3வது பந்தில் முன்ரோவை போல்டாக்கினார்.

அடுத்து வந்த ருதர்போர்ட் எம்பிடபிள்யூ ஆக, அடுத்த பந்தில் கிராண்ட்கோம் போல்டானார். கடைசி பந்தில் ரோஸ் டெய்லர் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டம் இழந்தார்.

இதன் மூலம் 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்து மலிங்கா சாதனை படைத்தார். இதற்கு முன் ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இதேபோல் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்துள்ளார்.   மேலும் டி. 20 போட்டிகளில் 100 விக்கெட் எடுத்த முதல் வீரர், டி20யில் 2வதுமுறை ஹாட்ரிக் விக்கெட் என்ற சாதனையையும் படைத்தார்.

நியூசிலாந்து 16 ஓவரில் 88 ரன்னுக்கு ஆல்அவுட் ஆக இலங்கை 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 விக்கெட் எடுத்த மலிங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார், நியூசிலாந்து கேப்டன் சவுத்தி தொடர்நாயகன் விருது பெற்றார். ஏற்கனவே முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றதால் 2-1 என தொடரை கைப்பற்றியது.

வெற்றிக்கு பின் மலிங்கா கூறுகையில், முதல் 2 போட்டியில் நாங்கள் சரியாக ஆடவில்லை. எங்களுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

அவர்களுக்காக முயற்சித்தோம். நான் விக்கெட் எடுக்கும் பந்தை வீச முயற்சித்தேன்.

2வது முறையான டி. 20யில் ஹாட்ரிக் எடுத்ததால் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேப்டனாக அணியை வழிநடத்துவதில் எந்த அழுத்தமும் இல்லை,. இங்கு வந்து கிரிக்கெட் ஆடிய நியூசிலாந்துக்கு நன்றி, என்றார்.

.

மூலக்கதை