மனைவி தொடுத்த சித்தரவதை வழக்கு... உங்களுக்கு 15 நாள் ‘டைம்’... ஷமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மனைவி தொடுத்த சித்தரவதை வழக்கு... உங்களுக்கு 15 நாள் ‘டைம்’... ஷமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட்

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது இவரது மனைவி ஹசின் ஜகான், பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தவிர, இவர் மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.

ஆனால் பிசிசிஐ விசாரணை நடத்தியதில் ‘ஷமி, எவ்வித மேட்ச் பிக்சிங்கிலும் ஈடுபடவில்லை’ என்பதை உறுதி செய்தது. இதன்பின் ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஷமி அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, முகமது ஷமி, அவரது சகோதரர் ஹசித் அஹமது ஆகியோர், தன்னை சித்திரவதை செய்ததாக அவரது மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். அதனடிப்படையில், இருவர் மீதும் ஐபிசி 498 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த அலிப்பூர் நீதிமன்ற கூடுதல் தலைமை நீதிபதி, முகமது ஷமி அவரது சகோதரர் ஆகிய இருவரையும் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தும், இவர்கள் நேரில் ஆஜராகாமல் இருந்தனர்.

இதையடுத்து, முகமது ஷமி, அவரது மனைவி ஹசின் ஜஹான் இருவரும் மாறிமாறி ஊடகங்களில் தங்கள் தரப்பு நியாயத்தை கூறி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை மீண்டும் விசாரித்த அலிப்பூர் நீதிமன்றம், ‘முகமது ஷமியும், அவரது சகோதரரும் 15 நாட்களுக்குள் காவல்துறை முன் சரணடைய வேண்டும்.

இல்லையேல் இருவரும் கைது செய்யப்படுவார்கள்’ என உத்தரவிட்டு, கைது வாரண்ட்டையும் பிறப்பித்துள்ளது.

.

மூலக்கதை