வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இமாலய வெற்றி: கரீபியன் தீவில் கோஹ்லி ‘டீம்’ ஜாலி...நாளை மறுநாள் 2வது டெஸ்ட் போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இமாலய வெற்றி: கரீபியன் தீவில் கோஹ்லி ‘டீம்’ ஜாலி...நாளை மறுநாள் 2வது டெஸ்ட் போட்டி

ஜமைக்கா:  வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி டி20, ஒரு நாள் தொடரில் வென்ற நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, ஆண்டிகுவாவில் நடந்தது.

இதில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சர்வதேச டெஸ்ட் அரங்கில் ‘நம்பர் ஒன்’ அணியான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 30ம் தேதி (நாளை மறுநாள்) ஜமைக்காவில் துவங்குகிறது.

முன்னதாக அந்நிய மண்ணில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அசத்தி உள்ளது. இந்த வெற்றியை மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய அணி வீரர்களுடன் கரீபியன் தீவில் கேப்டன் கோஹ்லி ஜாலியாகக் கொண்டாடினார்.



இதுதொடர்பாக, இந்திய அணியின் துவக்க வீரர் கே. எல். ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ராகுலுடன் கேப்டன் கோஹ்லி, அவரின் மனைவி அனுஷ்கா சர்மா, மாயங்க் அகர்வால், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் உள்ளனர்.

இந்த டுவிட்டர் பேஸ்ட்டுக்கு, அஸ்வின் பகிர்ந்துள்ள பதிலில், ‘கடல் மற்றும் சூரிய அஸ்தமனம் மரண காம்பினேஷன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் போட்டுள்ள பதிவில், ‘ஆண்டிகுவாவின் ஜாலியான கடற்கரையில், ரவிந்திர ஜடேஜாவுடன் ஜாலியாக ஜெட் ஸ்கை சவாரி’ என்று ஓர் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

.

மூலக்கதை