குறும்படத்தில் ஜான்விகபூர்

தினமலர்  தினமலர்
குறும்படத்தில் ஜான்விகபூர்

ஹிந்தியில் ‛தடக்' படத்தில் அறிமுகமான ஜான்வி கபூர், தற்போது ‛தோஸ்தானா 2', மற்றுமொரு ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இதுதவிர அஜித்தின் 60வது படம் மூலம் தமிழிலும் கால்பதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அனுராக் காஷ்யாப், கரண் ஜோகர், ஜோயா அக்தர் மற்றும் திபாகர் பானர்ஜி ஆகியோர் கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற பெயரில் வெப்சீரிஸ் மாதிரியான குறும்படங்கள் எடுக்கின்றனர். இதில் ஜோயா அக்தர் இயக்கும் குறும்படத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மாவும் நடிக்கிறார். இந்த தகவலை ஜான்வி கபூர் வீடியோ வாயிலாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை