தங்கம் விலை இன்று(ஆக.,19) சவரன் ரூ.160 சரிவு
சென்னை : தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற - இறக்கமாக உள்ளது. கடந்த சனியன்று சவரன் ரூ.192 உயர்ந்த நிலையில் இன்று(ஆக.,19) ரூ.160 சரிந்துள்ளது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,587க்கும், சவரன் ரூ.28,696க்கும். 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,440க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் சரிந்து ரூ.47.80க்கு விற்பனையாகிறது.