டிஎன்பிஎல் தொடரின் 14வது லீக் போட்டி காளையை அடக்கிய டிராகன்ஸ்: இன்று தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - காஞ்சி வீரன்ஸ் மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிஎன்பிஎல் தொடரின் 14வது லீக் போட்டி காளையை அடக்கிய டிராகன்ஸ்: இன்று தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்  காஞ்சி வீரன்ஸ் மோதல்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை அணிகள் மோதின. டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் அனிருதா மற்றும் சூர்ய பிரகாஷ் களமிறங்கினர். சூர்ய பிரகாஷ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் சிறப்பாக விளையாடிய காந்த் 59 பந்துகளில் 7 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் என 98 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். இறுதியில் காரைக்குடி காளை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

திண்டுக்கல் அணி தரப்பில் ரோகித் மற்றும் முகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து, 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது திண்டுக்கல் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக  ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஜோடி காரைக்குடி வீரர்களின் பந்துவீச்சை நாலாப்பக்கம் விளாசினர். ஹரி நிஷாந்த் 56 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 81 ரன்கள் விளாசினார்.

ஜெகதீசன் 47 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 78 ரன்கள் அடித்தார். அதையடுத்து, திண்டுக்கல் அணி 3 ஓவர்கள் மீதம் வைத்து, 17 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 161 ரன்கள் அடித்தது. இதன் மூலம் காரைக்குடி அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் திண்டுக்கல் டிராகன்ஸ் முதலிடத்தையும் பிடித்தது.

இன்று திருநெல்வேலி இந்தியா சிெசண்ட் மைதானத்தில் நடக்கும் 15வது லீக் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் காஞ்சி வீரன்ஸ் அணியும் இரவு 7. 15 மணிக்கு மோதுகின்றன.

.

மூலக்கதை