ரசிகர்களிடையே வரவேற்பு குறைந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாளை மறுநாள் தொடக்கம்: லண்டனில் 2021 ஜூனில் இறுதிபோட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரசிகர்களிடையே வரவேற்பு குறைந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நாளை மறுநாள் தொடக்கம்: லண்டனில் 2021 ஜூனில் இறுதிபோட்டி

துபாய்: ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் முதல் முறையாக வரும் 2021ம் ஆண்டு வரை நடக்கவுள்ளது. முன்னதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அடித்தளம் கடந்த 2010ல் துவங்கியது.

ஐசிசியின் மினி உலகக்கோப்பையாக கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பதிலாக கடந்த 2013ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பின்னர் கைவிடப்பட்டு, ஒருநாள் போட்டியாகவே நடத்தப்பட்டது.

தொடர்ந்து 2017ம் ஆண்டில் இத்தொடரை நடத்த திட்டமிட நிலையில், தற்போது 2019 - 2021ம் ஆண்டில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இத்தொடரில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ‘டாப்-9’ இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும்.

அதன்படி இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும்.

இத்தொடரில் பங்கேற்கும் 9 அணிகள், 6 அணிகளுக்கு எதிராக 3 அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணிலும், 3 அணிகளுக்கு எதிராக அந்நிய மண்ணிலும் போட்டிகளில் பங்கேற்கும்.

இப்போட்டிகள் பகல் ஆட்டமும், பகல்-இரவு ஆட்டமாக நடக்கும். மொத்தம் 71 போட்டிகள் நடக்கவுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் பகுதி வரும் 2021 முதல், 2023ம் ஆண்டு ஏப்ரல் வரை நடக்கவுள்ளது.   ஒரு தொடரில் வெற்றி பெற்றால் 60 புள்ளிகள், போட்டி டிராவில் முடிந்தால் 30 புள்ளிகள், முடிவு இல்லை என்றால், 20 புள்ளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு தொடரில் அணிகள் 3 டெஸ்ட் போட்டியில் மோதி ஒரு போட்டியில் வென்றால் 40 புள்ளிகள், போட்டி டிராவில் முடிந்தால் 20 புள்ளிகள், முடிவு இல்லை என்றால் 13. 3 புள்ளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி வாரியாக போட்டிகள் எண்ணிக்கை அடிப்படையில், இங்கிலாந்து - 22 போட்டிகள், ஆஸ்திரேலியா - 19, இந்தியா - 18, தென் ஆப்ரிக்கா - 16, வெஸ்ட் இண்டீஸ் - 15, நியூசிலாந்து - 14, வங்கதேசம் - 14, பாகிஸ்தான் - 13, இலங்கை - 13 போட்டிகளில் விளையாட உள்ளன. எப்படிேயா இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நாளை மறுநாள் (ஆக.

1) தொடங்குகிறது.

2021ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடைபெறு இந்தத் தொடரில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.    ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், டெஸ்ட் போட்டி மவுசு ெதாடர்ந்து குறைந்து வந்தது.

இருந்தாலும், டெஸ்ட் ெதாடர் காலாவதியாவதை தடுக்க, தற்போது ஐசிசி புதிய முயற்சியை எடுத்துள்ளது.

கிட்டதிட்ட 2 ஆண்டாக நடக்கும் போட்டி என்பதால், காலவேகத்தில் இறுதி போட்டியை பார்க்க 2 ஆண்டு காத்திருக்க வேண்டும் என்பதே யதார்த்தம்.

.

மூலக்கதை