தடை நீட்டிப்பால் வளர்ச்சி குறையும்

தினமலர்  தினமலர்
தடை நீட்டிப்பால் வளர்ச்சி குறையும்

மும்பை:ஊரடங்கை மேலும் நீட்டித்திருப்பது, பொருளாதார செயல்பாடுகளில் மேலும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும் என, பேங்க் ஆப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பேங்க் ஆப் அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளதாவது:மத்திய அரசு, ஊரடங்கை மேலும் நீட்டித்து அறிவித்திருப்பதால் வளர்ச்சி நடப்பு நிதியாண்டில், 2 சதவீதம் குறையும்.நாடு முடக்கம், ஜூலை மத்தி வரை நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலும், ஆகஸ்ட் மாதத்தில் தான் பொருளாதாரம் மீண்டும் துவங்கும் என்ற எண்ணத்திலும், பொருளாதாரம் இந்த அளவுக்கு சரியும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய கணிப்பை விட, 0.70 சதவீதம் கூடுதல் ஆகும்.தடுப்பு மருந்து தயாரா வது தாமதமாகி, அரசு மேலும் கூடுதல் தளர்வுகளுடன் தடையை நீட்டித்தால், பொருளாதார வளர்ச்சி, 5 சதவிதம் அளவுக்கு சரிவை காணும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை