தொடர்ந்து மாஸ்க் அணியுங்கள்: மகேஷ்பாபு

தினமலர்  தினமலர்
தொடர்ந்து மாஸ்க் அணியுங்கள்: மகேஷ்பாபு

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸின் தாக்கமும் அதன் காரணமாக நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளன. இந்தநிலையில் தற்போதுதான் ஊரடங்கு விதிகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு மக்கள் வெளியில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார்கள்.. விதிகள் ஓரளவு தளர்த்தப்பட்டாலும் மாஸ்க் அணிவதை மறக்கவே கூடாது என வலியுறுத்தியுள்ளார் நடிகர் மகேஷ்பாபு.

இது பற்றி அவர் கூறும்போது, “இப்போது தான் மெதுவாக வெளிவர ஆரம்பிக்கிறோம்.. ஆனால் நிச்சயமாக இந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயமான ஒன்று. ஒவ்வொரு முறை வெளியே செல்லும்போதும் மாஸ்க் அணிய மறக்காதீர்கள். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கான குறைந்த பட்ச பாதுகாப்பு முறை அது ஒன்றுதான். முடிந்தால் வீட்டிற்குள்ளேயும் மாஸ்க் அணிய பழகுங்கள்..

நான் வீட்டிலிருக்கும்போதும் மாஸ்க் அணிந்துகொண்டு தான் இருக்கிறேன்.. கொஞ்சம் சிரமமாக தெரியலாம் என்றாலும் இந்த நேரத்தில் அது தேவையான ஒன்று. எனக்கு மாஸ்க் அணிந்திருப்பது கூலாக இருக்கிறது... உங்களுக்கும் தானே.? இந்த புதிய வாழ்க்கைக்கு பழகிக்கொண்டு பழைய வாழ்க்கையை திரும்ப பெற முயல்வோம்” என மாஸ்க்கின் அவசியத்தை நன்கு வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை