ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் படத்தில் ஏற்பட்ட மாற்றம்

தினமலர்  தினமலர்
ஜி.வி.பிரகாஷ்  கவுதம் மேனன் படத்தில் ஏற்பட்ட மாற்றம்

ஜி.வி.பிரகாஷ் பல படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கும் படமும் ஒன்று. வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது டிஜி பிலிம் கம்பெனி என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது.

ஜி.வி.பிரகாசுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இவர்களுடன் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன் குணா மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.

மூலக்கதை