இனப்பாகுபாடு விளம்பரத்தை வெளியிட்டதா போக்ஸ்வேகன் நிறுவனம்?

தினமலர்  தினமலர்
இனப்பாகுபாடு விளம்பரத்தை வெளியிட்டதா போக்ஸ்வேகன் நிறுவனம்?

உலகப் புகழ்பெற்ற போக்ஸ்வேகன் கார் நிறுவனம் சமீபத்தில் ஓர் சர்ச்சைக்குரிய இனப்பாகுபாட்டு விளம்பரத்தை அமெரிக்காவில் வெளியிட்டு விமர்சத்துக்குள்ளாகி உள்ளது.

போக்ஸ் வேகன் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஒரு கருப்பினத்தவர் 'பெடிட் காலன்' எனப் பெயரிடப்பட்ட உணவு விடுதியில் இருந்து வெளியே வருகிறார். பெடிட் காலன் என்றால் பிரஞ்சு மொழியில் சிறுபான்மை குடிமக்கள் எனப் பொருள். போக்ஸ்வேகனை தொட முயலும் இந்த கருப்பினத்தவரை வெள்ளை இனத்தவர் பிடித்து கீழே தள்ளிவிடுவதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இன்ஸ்டாகிரமில் வெளியான சில நிமிடங்களிலேயே கண்டனங்கள் குவியத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து வீடியோ நீக்கப்பட்டது. போக்ஸ் வேகன் தலைமை வர்த்தக அதிகாரி குர்ஜன் ஸ்டாக்மென் இதுகுறித்துக் கூறுகையில் இனப்பாகுபாடு பார்க்கும் வகையில் போக்ஸ்வேகன் வீடியோ ஒன்றை தவறுதலாக வெளியிட்டுள்ளது. நெட்டிசன்களில் கொந்தளிப்பை அடுத்து இந்த வீடியோ எங்கள் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இதற்காக போக்ஸ்வேகன் நிறுவன் சார்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை