ஓராண்டில் இயல்புநிலை: நிறுவனங்கள் கணிப்பு

தினமலர்  தினமலர்

புது­டில்லி : நாடு முடக்­கப்­பட்ட சூழ­லில், நிறு­வ­னங்­களின் வரு­வாய், 25 சத­வீ­தம் அள­வுக்கு குறைந்­து­விட்­டது என்­றும், நிலைமை சரி­யாக, ஓராண்­டுக்­கும் மேல் ஆகும் என்­றும் ஆய்­வ­றிக்கை ஒன்று தெரி­வித்­துள்­ளது.

ஆய்­வில் பங்கேற்ற நிறு­வ­னங்­களின் உயர்­நிலை அதி­கா­ரி­களில் பெரும்­பா­லா­னோர், நிறு­வன வரு­வாய் ஏற்­க­னவே, 25 சத­வீ­தம் அள­வுக்கு குறைந்­து­விட்­ட­தா­க­வும், மீண்­டும் இயல்பு நிலைக்கு திரும்ப, ஓராண்­டுக்கு மேலா­கும் என்­றும் தெரி­வித்­துள்­ள­னர்.‘ஆன்­லைன்’ முத­லீட்டு நிறு­வ­ன­மான, ’ஸ்கி­ரிப்­பாக்ஸ்’ மேற்­கொண்ட ஆய்­வில், இவ்­வாறு தெரி­ய­வந்­துள்­ளது.
ஆய்­வில் பங்கேற்ற நிறு­வ­னர்­கள், உரி­மை­யா­ளர்­கள், உய­ர­தி­கா­ரி­களில், 67 சத­வீ­தத்­தி­னர், நாடு முடக்­கப்­பட்­ட­தால், ஏற்­க­னவே, 25 சத­வீத வரு­வாய் குறைந்­து­விட்­ட­தாக தெரி­வித்­துள்­ள­னர்.மேலும், கிட்­டத்­தட்ட அனை­வ­ருமே, இயல்பு நிலை, 2021ல் தான் திரும்­பும் என்­றும் தெரி­வித்­துள்­ள­னர். அதில், 22 சத­வீ­தத்­தி­னர், இயல்பு நிலை திரும்ப, ஓராண்­டுக்கு மேலா­கும் என்று தெரி­வித்­துள்­ள­னர்.இந்த ஆய்வு, 1,200 பேரி­டம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக, ஸ்கி­ரிப்­பாக்ஸ் நிறு­வ­னம் தெரி­வித்­து உள்­ளது.

மூலக்கதை