தொழில் துவங்க ஏற்ற இடம் சென்னை
புதுடில்லி:பன்னாட்டு வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க மிகவும் ஏற்ற இடங்களாக சென்னை, அகமதாபாத், பெங்களூரு, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட, 10 இடங்கள் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சொத்து ஆலோசனை நிறுவனமான, ஜெ.எல்.எல்., இந்தியா மற்றும் இன்வெஸ்ட் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ‘இந்தியாவில் தொழில் துவங்க சிறந்த இடங்கள்’ என, ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கை, இந்தியாவில் உள்ள, 40 தொழிற்சாலை பகுதிகளை குறிப்பிட்டு, அவற்றில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க சிறந்த இடங்களாக, 10 இடங்களை தேர்வு செய்து வெளியிட்டு உள்ளது. கொரோனா பாதிப்புகளை அடுத்து, இந்தியா தொழில் துவங்க சிறந்த இடமாக இருக்கிறது என, ஆய்வு தெரிவித்துள்ளது.ஆய்வில், தொழிற்சாலைகள் அமைக்க சிறந்த இடங்களாக குறிப்பிட்டுள்ளவற்றில் சென்னையும் ஒன்று. சென்னை நகரம் மட்டுமின்றி; சென்னை – திருப்பதி – நெல்லுார் என மூன்று நகர தொழிற்சாலை பெருவழித் தடமும் தொழிற்சாலைகள் அமைக்க ஏற்றதாக உள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.