பாதிப்பு இல்லாத பந்து * அனுமதி கேட்கும் ஆஸி., | மே 20, 2020

தினமலர்  தினமலர்
பாதிப்பு இல்லாத பந்து * அனுமதி கேட்கும் ஆஸி., | மே 20, 2020

மெல்போர்ன்: வீரர்கள் பயன்படுத்தினால் தொற்று ஏற்படாத வகையிலான பந்தை பயன்படுத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுகிறது.

கொரோனா காரணமாக கிரிக்கெட்டில் பல்வேறு புதிய விதிகள் அறிமுகம் ஆக உள்ளன. வீரர்கள் கைகுலுக்குவது தடை செய்யப்பட்டது. கொரோனா பரவும் என்பதால், பவுலர்கள் பந்தை பளபளபாக்க எச்சில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இதனிடையே வீரர்களுக்கு தொற்று ஏற்படாத வகையிலான பந்தை பயன்படுத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இதற்கு ஐ.சி.சி., அனுமதி தர வேண்டும் என தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவியல் மற்றும் மருத்துவ மானேஜர் அலெக்ஸ் கவுன்டூரிஸ் கூறியது:

கொரோனா அச்சத்தால் வீரர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் தொற்று ஏற்படாத பந்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். வழக்கமான பந்தைப் போல தோல் பயன்படுத்தி தான் தயாரிக்கப்படும் என்றாலும் தொற்று ஏற்படக் கூடாது என்பதால் சற்று கடினமாக இருக்கும். சிறு பிளவுகள் இதில் காணப்படும். இது கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வருமா, இல்லையா, இதை பயன்படுத்த அனுமதி கிடைக்குமா எனத் தெரியவில்லை. எல்லாமே பேச்சு அளவில் உள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி.,யிடம் அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை