கோஹ்லி, புஜாரா ஏமாற்றம் | பெப்ரவரி 23, 2020

தினமலர்  தினமலர்
கோஹ்லி, புஜாரா ஏமாற்றம் | பெப்ரவரி 23, 2020

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் கோஹ்லி, புஜாரா ஏமாற்றினர். 

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வெலிங்டனில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 165 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. வாட்லிங் (14), கிராண்ட்ஹோம் (4) அவுட்டாகாமல் இருந்தனர். 

இஷாந்த் ‘5’

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. பும்ரா பந்தில் வாட்லிங் (14) அவுட்டானார். கிராண்ட்ஹோம் 43 ரன்கள் எடுத்தார். அஷ்வின் ‘சுழலில்’ ஜேமிசன் (44) சிக்கினார். பவுல்ட்டை (38) வெளியேற்றிய, இஷாந்த் ஐந்தாவது விக்கெட்டை கைப்பற்றினார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பவுல்ட் மிரட்டல்

இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு பவுல்ட் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ பிரித்வி ஷா (14), புஜாரா (11) அவுட்டாகினர். மயங்க் அகர்வால் (58) அரை சதம் கடந்தார். கேப்டன் கோஹ்லி 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ரகானே, விஹாரி இணைந்து பொறுப்புடன் விளையாடினர். ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 39 ரன்கள் பின்தங்கி இருந்தது. ரகானே (25), விஹாரி (15) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக பவுல்ட் 3 விக்கெட் கைப்பற்றினார். 

 

 

 

 

 

 

மூலக்கதை