ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 5வது பதக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 5வது பதக்கம்

புதுடெல்லி: புதுடெல்லியில் நடந்து வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று இந்திய வீரர்கள் அஷு, ஆதித்யா குண்டு மற்றும் ஹர்தீப் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இதையடுத்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று நடந்த 67 கிலோ எடைப்பிரிவல் அஷுவும், சிரியா வீரர் அப்துல்கரீம் மொகமது அல் ஹசனும் மோதினர். இதில் 8-1 என்ற புள்ளிக்கணக்கில் அஷு வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

72 கிலோ எடைப்பிரிவில் ஆதித்யாவும், ஜப்பான் வீரர் நவோ குசாகாவும் மோதினர்.
இதில் ஆதித்யா 8-0 என்ற புள்ளி கணக்கில் ஜப்பான் வீரரை வீழ்த்தி, வெண்கலம் வென்றார்.



நேற்று மாலை நடந்த 97 கிலோ எடைப்பிரிவில் ஹர்தீப்பும், கிர்கிஸ்தான் வீரர் பெக்சுல்தானும் மோதினர். இதில் கடும் போராட்டத்துக்கு பின்னர் 3-1 என்ற புள்ளி கணக்கில் ஹர்தீப் வென்றார்.

முன்னதாக நேற்று முன்தினம் நடந்த 87 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் நடந்த 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

நேற்று இந்திய வீரர்கள் 3 வெண்கலப்பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

.

மூலக்கதை