டோக்கியோவில் கொண்டாட்டம் ஒளிரும் ஒலிம்பிக் வளையம்: பன்முகத்தன்மையை பகிர ஏற்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
டோக்கியோவில் கொண்டாட்டம் ஒளிரும் ஒலிம்பிக் வளையம்: பன்முகத்தன்மையை பகிர ஏற்பாடு

டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோவில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்காக 200க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10,000 விளையாட்டு வீரர்கள்  பங்கேற்கின்றனர். முன்னதாக நேற்று போட்டிகள் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக நடத்தப்படும் விழாவிற்காக ஒளிரும்  ஒலிம்பிக் வளையங்களுக்கு அருகே வாணவேடிக்கை வானத்தை ஒளிரச் செய்தது.

ஜப்பான் தலைநகரின் மிக உயரமான அடையாளமாக கருதப்படும் டோக்கியோ ஸ்கைட்ரீயில், இந்த ஒளிரும் ஒலிம்பிக் வளையம் காண்பிக்கப்பட்டது. டென்னிஸ் வீரர் நவோமி ஒசாகா, “நாங்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமாக இருக்கிறோம்; அனைத்துமே ஒரே மாதிரியானவை.



இந்த தருணங்களில் நாம் அனுபவிக்கும் உணர்ச்சிகளை நாம் பகிர்ந்து கொள்வோம்’ என்று வீடியோ லைவ் மூலம் தொகுத்து வழங்கினார். டோக்கியோ 2020 தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ கூறுகையில், ‘‘பல்வேறு வகையான மக்கள் குழுக்கள், தங்கள் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒன்றாக முடியும்.

டோக்கியோ 2020 விளையாட்டுக்கள் அப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.


.

மூலக்கதை