அப்புக்குட்டிக்கு நேர்ந்த சங்கடம் தான் சுரபி லட்சுமிக்கும்

தினமலர்  தினமலர்
அப்புக்குட்டிக்கு நேர்ந்த சங்கடம் தான் சுரபி லட்சுமிக்கும்

மலையாளத்தில் 2017 இல் வெளியான 'மின்னாமினுங்கு' என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் நடிகை சுரபி லட்சுமி. கடந்த 2005ல் இருந்து மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலைகாட்டி வந்தார். தமிழில் கூட வாயை மூடி பேசவும் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற பின்னர் இவர் மீதான மதிப்பும் மரியாதையும் மலையாளத் திரையுலகில் கூடியது. ஆனால் அதுவே அவருக்கு மிகப்பெரிய சங்கடத்தையும் தேடித்தந்துள்ளது.. ஆம், இதற்கு முன்பு சாதாரண ஏதோ ஒரு கதாபாத்திரம் என்றால் இவரை அழைத்து நடிக்க வைத்த இயக்குனர்கள் தற்போது இவரது நடிப்பு மற்றும் இவருக்கு கிடைத்த தேசிய விருது இரண்டையும் மனதில் கொண்டு இவரை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது என்கிற குழப்பத்திலேயே இவரை கண்டுகொள்ளாமல் போய்விடுகின்றனர்.

இருந்தாலும் நடிப்புக்கு வாய்ப்பு உள்ள எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க தயார் தான் என்று சொல்லி வருகிறார் சுரபி லட்சுமி. தமிழில் காமெடியனாக நடித்து வந்த நடிகர் அப்புகுட்டி கூட அழகர்சாமியின் குதிரை படத்திற்காக தேசிய விருது பெற்ற பின்பு அவருக்கும் இதேபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டு அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து போனது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை