ஜனவரி மாத ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு

தினமலர்  தினமலர்
ஜனவரி மாத ஏற்றுமதி 1.66 சதவீதம் சரிவு

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து ஆறாவது மாதமாக குறைந்துள்ளது.


கடந்த ஜனவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 1.66 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இது குறித்து, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் ஏற்றுமதி, ஜனவரி மாதத்தில், 1.66 சதவீதம் குறைந்து, 1.84 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இறக்குமதியும், 0.75 சதவீதம் சரிவை கண்டுள்ளது.


மொத்தம், 2.92 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி ஜனவரியில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, கடந்த ஜனவரி மாதத்தில், 1.08 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இவ்வாறு, அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை