சிம்புவுடன் திருமணமா? - சுபிக்ஷா பரபரப்பு!

தினமலர்  தினமலர்
சிம்புவுடன் திருமணமா?  சுபிக்ஷா பரபரப்பு!

சென்னை: நடிகர் சிம்புவுடன் திருமணம் நடக்க உள்ளதாக வெளியான தகவலை, நடிகை சுபிக்ஷா மறுத்துள்ளார்.

சிம்புவுக்கு பெண் பார்க்கும் வேலைகளில், அவரது பெற்றோர் தீவிரமாக இறங்கியுள்ளனர். சிம்புவின் எல்லா பிரச்னைகளுக்கும், திருமணம் தான் நல்ல தீர்வாக அமையும் என, அவர்கள் நம்புகின்றனர். அதனால், அவரது ஜாதகத்திற்கு ஏற்ற பெண்ணை தேடி வருகின்றனர். இந்நிலையில் சிம்புவுக்கும், ‛அன்னக்கொடி' படம் வாயிலாக, தமிழில் அறிமுகமான நடிகை சுபிக்ஷாவுக்கும் திருமணபேச்சு நடப்பதாக, சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது. சமீபநாட்களாக, சிம்பு பங்கேற்ற விருந்துகளில், சுபிக்ஷாவும் ஆஜரானார்.

இது குறித்து, சுபிக்ஷா அளித்த பேட்டி: சிம்பு மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. அவர், நண்பர்களுக்கு மரியாதை அளிப்பவர். தொழில் ரீதியாக, நாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருகிறோம். எங்கள் இருவருக்கும் திருமண பேச்சு நடக்கிறது என்பதில் உண்மையில்லை. சமீபத்தில், சிம்பு உடன் ஒன்றிரண்டு விருந்தில் பங்கேற்றேன்; அதை வைத்து, தவறாக சித்தரிக்கின்றனர். நாங்கள் தொழில் ரீதியாக, இன்னும் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது. எதிர்காலத்தில், சிம்பு படத்தில் நடிப்பேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை