நாளை 3வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணியில் மீண்டும் இஷ் சோதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை 3வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணியில் மீண்டும் இஷ் சோதி

மவுன்ட் மாங்கனூய்: சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி, மீண்டும் நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ளார். நாளை இந்திய அணிக்கு எதிராக  நடைபெற உள்ள 3வது ஒருநாள் போட்டிக்கான நியூசி.

அணியில் அவரும், வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2--0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ள நிலையில், 3வது  ஒருநாள் போட்டி நாளை மவுன்ட் மாங்கனூயில் நடைபெற உள்ளது.

இப்போட்டிக்கான அணியில் தற்போது பவுலர்கள் இஷ் சோதி மற்றும் பிளேர்  டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி மற்றும் ஸ்காட் குக்கலிகன் ஆகியோர் வைரஸ் காய்ச்சலால்  பாதிக்கப்பட்டு தேறி வருகின்றனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

ஆக்லாந்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் சான்டனரும்,  குக்கலிகனும் ஆடவில்லை. சவுத்தி சற்று உடல்நலக்குறைவுடன் அப்போட்டியில் ஆடினார்.


உடல்நலக் குறைவால் ஏற்கனவே நியூசி. அணியில் கேப்டன் கேன் வில்லியம்ஸ் இடம் பெறவில்லை.

இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டியில்  மேலும் 3 வீரர்கள் ஆடுவது சந்தேகம் என்ற நிலையில் வேறு வழியின்றி, இஷ் சோதியும், டிக்னரும் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் சோதி, அணியில் இடம் பெற்றிருந்தார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, சோதியின்  சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் ஆடுவதற்காக, நியூசிலாந்து ஏ  அணிக்கு சோதி சென்று விட்டார். அதனால் அவர் ஆக்லாந்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ஆடவில்லை.

தற்போது மீண்டும் அழைக்கப்பட்டுள்ள சோதியும், டிக்னரும் இன்று காலை மவுன்ட் மாங்கனூய் வந்து, அணியின் மற்ற வீரர்களோடு இணைந்து  பயிற்சியில் ஈடுபட்டனர்.

அதே சமயம் சோதிக்கு பதிலாக ஆக்லாந்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் பென் லிஸ்டர், நியூசிலாந்து ஏ  அணியில் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான 3வது நாள் போட்டி நாளை மவுன்ட் மாங்கனூயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 7. 30  மணிக்கு துவங்க உள்ளது.

.

மூலக்கதை