வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி சாதனை 17 முறை சேஸ் செய்த ‘300 பிளஸ்’: சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா முதலிடம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி சாதனை 17 முறை சேஸ் செய்த ‘300 பிளஸ்’: சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியா முதலிடம்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி20  தொடரை விண்டீஸ் அணி இழந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் நேற்று நடைபெற்றது.

முதல் இரண்டு ஒருநாள்  போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. கட்டாக்கில் நடைபெற்ற  கடைசி போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த விண்டீஸ் அணிக்கு, நிக்கோலஸ் பூரான் 89 ரன்களும், ஷாய் ஹோப் 42 ரன்களும் எடுத்ததால், 50 ஓவர்கள் முடிவில் 5  விக்கெட்டுகளை இழந்த விண்டீஸ் அணி 315 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய  இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா 63 ரன்களும், கே. எல். ராகுல் 77 ரன்களும், விராட் கோஹ்லி 85 ரன்களும் எடுத்து கைகொடுத்ததால் 48. 5  ஓவரிலேயே இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.



மூன்றாவது போட்டியில் 300 மற்றும் அதற்கு அதிகமான ரன்களை சேஸ் செய்து வென்றதன் மூலம், அதிகமுறை ஒருநாள் போட்டிகளில் 300  ரன்களுக்கு மேல் சேஸ் செய்து வென்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இந்திய அணி இதுவரை 17 முறை 300க்கும் மேற்பட்ட  ரன்களை சேஸ் செய்து வென்றுள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து  11 முறை, ஆஸ்திரேலியா  10 முறை, இலங்கை  10 முறை,  தென்னாபிரிக்கா 6 முறை, பாகிஸ்தான் 6 முறை என்ற நிலையில் பட்டியலில் உள்ளன.

.

மூலக்கதை