ஹார்டஸ் வில்ஜோன் விளையாட வரமாட்டார் சகோதரியை இப்படியா விமர்சிப்பது?...சர்ச்சையில் சிக்கிய பாரல் ராக்ஸ் கேப்டன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹார்டஸ் வில்ஜோன் விளையாட வரமாட்டார் சகோதரியை இப்படியா விமர்சிப்பது?...சர்ச்சையில் சிக்கிய பாரல் ராக்ஸ் கேப்டன்

போலந்து:  தென்னாப்பிரிக்காவில் மசான்சி சூப்பர் லீக் தொடரில் பாரல் ராக்ஸ் அணியின் கேப்டனாக டு பிளசிஸ் (35) செயல்பட்டு வருகிறார். இதில், போலண்ட் பார்க்கில் நடைபெற்ற நெல்சன் மண்டேலா பே ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான  போட்டியில் டாஸ் போட்டு அதை இழந்த பிறகு, தனது அணியின் பிளேயிங் குறித்து பேசிய டு பிளசிஸ்,  “எங்களது அணியில் ஹார்டஸ் வில்ஜோன் விளையாட மாட்டார்.

ஏனென்றால் அவர் இன்று என் சகோதாரியுடன் படுக்கையில்  இருப்பார். இவர்கள் இருவருக்கும் (போட்டிக்கு முதல் நாள்) தான் திருமணம் நடைபெற்றது” என்றார்.

டு பிளசிஸ் ஏதோ ஒரு காரணம் சொல்லப் போகிறார் என்று தலை அசைத்துக் கொண்டிருந்த வர்ணனையாளர், அவர் இந்த காரணத்தை  சொன்ன பிறகு, ஒரு நொடி ஜெர்க் ஆனார்.

 பின்னர், சிரித்து அப்படியே சமாளித்துவிட்டார். டு பிளசின் சகோதரி ரெமி ரைனர், ஹார்டஸ் வில்ஜோன் என்பவரை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நேர்மையாக இருக்கலாம்;  ஆனால் இவ்வளவு நேர்மையாக இருக்கக் கூடாது.

சகோதரியை இப்படியா விமர்சிப்பது’ என்றெல்லாம்  தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ் பேச்சு குறித்து சமூக வாசிகள் பீதி  கலந்த அதிர்ச்சியுடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

.

மூலக்கதை