கார்ப்பரேட் வரி குறைப்பால் தனியார் முதலீடு அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
கார்ப்பரேட் வரி குறைப்பால் தனியார் முதலீடு அதிகரிப்பு

புதுடில்லி:அண்மையில் அறிவிக்கப்பட்ட கார்ப்பரேட் வரி குறைப்பு, முதலீடுகளை அதிகரிப்பதற்காக செய்யப்பட்டதாக தலைமை பொருளாதார ஆலோசகர்,கே.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நேற்று, பிக்கி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற, பிக்கி இளம் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசியபோது, அவர் இவ்வாறு கூறினார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:பொருளாதார வளர்ச்சிக்கு, தனியார் முதலீடுகள் மிகவும் முக்கியமானதாகும். கார்ப்பரேட் வரி குறைப்பாகட்டும், ஊதியங்கள் மற்றும் தொழில்துறை உறவுகள் குறித்த விதிமுறைகளாக இருக்கட்டும், அவை அனைத்தும் முதலீட்டு சூழலை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளே.நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு, முதலீடுகள் மிகவும் முக்கியமானதாகும்.
நன்கு சிந்திக்கப்பட்டு, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதன் பலனை விரைவில் காணலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.கடந்த செப்டம்பர் மாதத்தில், கார்ப்பரேட் வரியை, 30 சதவீதத்திலிருந்து, 22 சதவீதமாக குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. புதிய நிறுவனங்களுக்கு, 15 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.

மூலக்கதை