ரஜினி படத்தில் நான்... : மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்

தினமலர்  தினமலர்
ரஜினி படத்தில் நான்... : மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்

‛தர்பார்' படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினி. இது இவரின் 168வது படமாக உருவாகிறது. இசையமைப்பாளராக இமான், காமெடி நடிகராக சூரி மட்டுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ரஜினி ஜோடியாக மூத்த நடிகைகள் குஷ்பு, மீனா ஆகியோர் நடிப்பதாக கூறப்படும் நிலையில் இப்போது கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். இவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது மகளாக நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

இதுப்பற்றி கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ரஜினியின் மிகப்பெரிய ரசிகையான நான், அவரின் 168வது படத்தில் நடிக்கிறேன் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

மூலக்கதை