டிச., 11ல் ஐதராபாத்தில் துவங்குகிறது ‛ரஜினி 168'

தினமலர்  தினமலர்
டிச., 11ல் ஐதராபாத்தில் துவங்குகிறது ‛ரஜினி 168

ரஜினி நடித்துள்ள ‛தர்பார்' படம், பொங்கல் விருந்தாக ஜன.,9ல் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து, சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் இணைந்துள்ளனர். இன்னும் பல நடிகர்கள் இணைய உள்ளனர். இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ரஜினி பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்னதாக டிச.,11ம் தேதி, ஐதராபாத்தில் துவங்குகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு அங்கு தான் நடைபெற இருக்கிறது. முதலாவதாக ரஜினி - கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகின்றன.

மூலக்கதை