பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் மெஹுலி கோஷ் உலக சாதனை...44 பதக்கத்துடன் 3ம் இடத்தில் இந்தியா

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் மெஹுலி கோஷ் உலக சாதனை...44 பதக்கத்துடன் 3ம் இடத்தில் இந்தியா

காட்மாண்டு: நேபாள நாட்டின் காட்மாண்டுவில் நடைபெறும் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள்  போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் அனைத்து பதக்கங்களையும் வென்றனர். சிறந்த மதிப்பெண்ணுடன் மெஹுலி கோஷ் தங்கம்  வென்று உலக சாதனை படைத்தார்.

இருப்பினும், மெஹுலியின் முயற்சி உலக சாதனையாக கருதப்படாது. ஏனெனில் தெற்காசிய விளையாட்டு  போட்டி முடிவுகள் சர்வதேச அமைப்பால் (ஐ. எஸ். எஸ். எஃப்) அங்கீகரிக்கப்படவில்லை.

இறுதிப் போட்டியில் 19 வயதான மெஹுலி 253. 3 மதிப்பெண்களுடன் தங்கம் வென்றார்.

இது தற்போதைய உலக சாதனையான 252. 9ஐ விட 0. 4  அதிகமாகும். இது மற்றொரு இந்தியரான அபுர்வ் சண்டேலாவின் பெயரில் உள்ளது.

யங்கா சதங்கி 250. 8 மதிப்பெண்களுடன் வெள்ளி வென்றார்.   ஸ்ரேயா அகர்வால் (227. 2) சடோபாடோ ஷூட்டிங் ரேஞ்சில் இந்தியர்கள் 1-2-3 வெண்கலத்தை வென்றனர். கடந்த 2018ல் ஐ. எஸ். எஸ். எஃப் உலக  சாம்பியன்ஷிப் போட்டியில் மெஹுலி 10 மீ ஏர் ரைபிள் வெள்ளி வென்றார்.



அவர் 2018 காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர் ஒலிம்பிக்கிலும்  வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில், நேற்றிரவுடன் முடிந்த போட்டியில் 44 பதக்கத்துடன் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

அதில், 19 தங்கம், 16 வெள்ளி, 9  வெண்கலம் பதக்கங்களை வென்றது.

50 பதக்கத்துடன் இலங்கை முதலிடத்திலும், 46 பதக்கத்துடன் நேபாளம் இரண்டாம் இடத்திலும் உள்ளது  குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை