பிறப்பு சான்றிதழில் மோசடி: இளம் வீரருக்கு 2 ஆண்டு தடை...பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிறப்பு சான்றிதழில் மோசடி: இளம் வீரருக்கு 2 ஆண்டு தடை...பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

மும்பை: டெல்லியைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான ப்ரின்ஸ் ராம் நிவாஸ் யாதவ், டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான  அணியில் விளையாட 2018-19ம் ஆண்டுகளில் பதிவு செய்திருந்தார். அதேபோல் 2019-20ம் ஆண்டிலும் பதிவு செய்துள்ளார்.

இதற்காக அவர்  சமர்பித்துள்ள பிறப்பு சான்றிதழில் அவரின் பிறந்த தேதி டிச. 12, 2001 என கூறப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த டெல்லி கிரிக்கெட் சங்கம்,  பிசிசிஐ-யிடம் இளம் வீரர் ராம் நிவாசின் பிறப்பு சான்றிதழ் குறித்து உறுதிசெய்யுமாறு கடிதம் அனுப்பியது.

இதையடுத்து, ராம் நிவாஸ் குறித்த தகவல்களை சோதனை செய்ததில், ராம் நிவாஸ் தனது 10ம் வகுப்பு படிப்பை கடந்த 2012ம் ஆண்டு நிறைவு  செய்ததுதாகவும், உண்மையான பிறந்த தேதி ஜூன் 10, 1996 எனவும் தெரியவந்தது.

இதையடுத்து பிறப்பு சான்றிதழை ஏமாற்றியதற்காக இளம் வீரர்  ராம் நிவாசுக்கு இரண்டு ஆண்டுகள் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க பிசிசிஐ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ  வெளியிட்ட அறிக்கையில், ‘‘பிறப்பு சான்றிதழ் போலி என்பது உறுதியாகி உள்ளது.

அதனால், இரண்டு ஆண்டுகாலம் எவ்வித போட்டிகளிலும்  பங்கேற்க தடைவிதிக்கப்படுகிறது.

இந்த தடைக்காலம் முடிந்ததும், சீனியர் கிரிக்கெட் அணியில் மட்டுமே பங்கேற்க முடியும்’ என்று தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை