கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தவர் மோகன்லால் பட கதாநாயகி ஆனார்

தினமலர்  தினமலர்
கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தவர் மோகன்லால் பட கதாநாயகி ஆனார்

மலையாளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பஹத் பாசில் வெளியான ‛மகேஷிண்டே பிரதிகாரம்' என்கிற படம் உதயநிதி நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‛நிமிர்' என்கிற பெயரில் தமிழில் ரீமேக் ஆனது. இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்த இருவரை தவிர்த்து அந்த படத்தில் காமெடி நடிகராக நடித்த கருணாகரனுக்கு ஜோடியாக சில காட்சிகளில் நடித்தவர் மலையாள நடிகை காதா.

விளம்பர மாடலான இவர் தற்போது சித்திக் டைரக்ஷனில் மோகன்லால் நடித்துவரும் பிக் பிரதர் என்கிற படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நடிக்க இருந்த நிலையில் அவர் விலகிவிட, அந்த வாய்ப்பு காதாவை தேடிப்போனதாம்.

இந்தப்படத்தின் முதல் காட்சியிலேயே மோகன்லாலுடன் நடிக்கும் அதிர்ஷ்டத்தை பெற்ற காதா, மோகன்லாலுடன் நடிப்பதை நினைத்து ஆரம்பத்தில் பயந்தாராம்.. ஆனாலும், தன் பதட்டத்தை நீக்கி டென்ஷன் இல்லாமல் நடிப்பதற்கு மோகன்லாலும் இயக்குனர் சித்திக்கும் ரொம்பவே உதவியாக இருந்தார்கள் என்று கூறியுள்ளார் காதா.

மூலக்கதை