குழந்தைகளுடன் கோஹ்லி உருக்கமான சந்திப்பு | நவம்பர் 22, 2019

தினமலர்  தினமலர்
குழந்தைகளுடன் கோஹ்லி உருக்கமான சந்திப்பு | நவம்பர் 22, 2019

 கோல்கட்டா: எச்.ஐ.வி., பாதித்த குழந்தைகளை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார் இந்திய அணி கேப்டன் கோஹ்லி.

இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் முதல் பகலிரவு டெஸ்ட் கோல்கட்டாவில் நடக்கிறது. இப்போட்டிக்காக கோல்கட்டா வந்துள்ள கோஹ்லி, 28 கி.மீ., துாரத்தில் உள்ள கோபிந்தபூர் சென்றார். இங்கு ஆனந்தஹர் என்பவர் நடத்தும் எச்.ஐ.வி., பாதித்த குழந்தைகளுக்கான மையத்துக்கு சென்றார். 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோஹ்லியை சந்தித்து மகிழ்ந்தனர். 

அப்போது கோஹ்லி,‘‘எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், அது தான் மிக முக்கியம்,’’ என்றார். சமீபத்தில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோராக கோஹ்லி 254 ரன்கள் விளாசி இருந்தார். இதை நினைவு படுத்தும் வகையில் 254 ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்தை, கோஹ்லிக்கு பரிசாக தந்தனர். 

அப்போது ஒரு சிறுமி,‘நாங்கள் உங்களுக்கு 254 ரோஜாக்கள் கொடுத்துள்ளோம். ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் பகலிரவு டெஸ்டில், இன்னும் அதிகமாக நீங்கள் ரன்கள் குவிக்க வேண்டும்,’ என்றார். 

மூலக்கதை