வங்கதேச வீரருக்கு உதவிய கோஹ்லி | நவம்பர் 22, 2019

தினமலர்  தினமலர்
வங்கதேச வீரருக்கு உதவிய கோஹ்லி | நவம்பர் 22, 2019

கோல்கட்டா: இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக, இந்திய மண்ணில் முதன் முறையாக நடக்கிறது. 

இதில் முகமது ஷமி வீசிய பவுன்சர் பந்து (21.3வது) வங்கதேசத்தின் லிட்டன் தாஸ், ‘ஹெல்மெட்’ முன்பகுதியில் பலமாக தாக்கியது. இதனால் லிட்டன் தாஸ் (24) ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் திரும்பினார். 

* தொடர்ந்து ஷமி வீசிய மற்றொரு பந்து (22.1வது ஓவர்), நயீம் ‘ஹெல்மெட்டில்’ தாக்க, ஷமியை ‘ஹெல்மெட் கில்லர்’ என வர்ணனை செய்தனர். அப்போது, வங்கதேச அணியின் ‘பிசியோதெரபிஸ்ட்’ லிட்டன் தாசிற்கு உதவிக் கொண்டிருந்தார். 

உடனே, இந்திய அணி கேப்டன் கோஹ்லி, தங்களது ‘பிசியோதெரபிஸ்ட்டை’ அழைத்து, நயீமிற்கு உதவச் செய்தார். கோஹ்லியின் இச்செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது.

மூலக்கதை