ஆயிரம் கோடி வசூலைக் கொடுப்பாரா அக்ஷய் குமார் ?

தினமலர்  தினமலர்
ஆயிரம் கோடி வசூலைக் கொடுப்பாரா அக்ஷய் குமார் ?

இந்தியாவிலேயே ஹிந்தித் திரையுலகில் தான் முதன் முதலில் 100 கோடி வசூல் என ஆரம்பித்து, பின்னர் பல 100 கோடி வசூல் படங்கள் வந்து 100 கோடி கிளப் என்று உருவானது. அடுத்த சில வருடங்களில் அந்த 100 கோடி 200 கோடி, 300 கோடி என அதிகரித்து 'பாகுபலி' படத்தில் 1000 கோடி வசூலையும் தொட்டது.

ஹிந்தி ஹீரோக்களில் ஒரே ஆண்டில் அதிக வசூலைக் கொடுத்த நடிகர் என்பதில் சல்மான் கான், 2016ம் ஆண்டில் சுமார் 950 கோடி வரை சென்றுள்ளார். அதற்குப் பிறகு இப்போது 2019ம் ஆண்டில் அக்ஷய்குமாருக்கு 1000 கோடி வசூலைக் கொடுக்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

இந்த வருடத்தில் அவர் நடித்து வெளிவந்த 'கேசரி, மிஷன் மங்கல், ஹவுஸ்புல்' ஆகிய படங்கள் மூலம் 800 கோடி வசூல் வந்துள்ளது. அடுத்து இந்த ஆண்டில் டிசம்பர் கடைசியில் வெளிவர உள்ள 'குட் நியூஸ்' படம் 200 கோடி வசூலைத் தாண்டினால் முதன் முதலில் ஒரே ஆண்டில் 1000 கோடி வசூலைத் தந்தவர் என்ற பெருமையை அக்ஷய்குமார் பெறுவார். அது நடந்துவிடும் என்று பாலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

மூலக்கதை